• Apr 20 2024

நுவரெலியா கல்வி வலயத்தில் ஒரேடியாக 8 அதிபர்கள் ஓய்வு!

crownson / Dec 27th 2022, 7:03 am
image

Advertisement

நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட மிகச்சிறந்த  8 அதிபர்கள், இம்மாத கடைசியில் ஓய்வு பெற உள்ளதாக நுவரெலியா கல்வி வலய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை போட்மோர் தமிழ் வித்தியாலய அதிபர் கிரிஸ்டோபர் சார்ள்ஸ், 34 வருட அரச சேவையிலிருந்து ஹோல்புறூக் ஆரம்ப பாடசாலை அதிபர் சுப்ரமணியம் புஸ்பனீனா, 35 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கார்லிபேக் தமிழ் வித்தியாலய அதிபர் அந்தோனிமுத்து சவரிமுத்து, 31 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கிளாஸ்கோ தமிழ் வித்தியாலய அதிபர் சுப்பையாபிள்ளை கோகிலவாணி, 35 வருட அரச சேவையிலிருந்து சென்கிளையார் தமிழ் மகா வித்தியால அதிபர் ஆறுமுகம் சத்தியமூர்த்தி,  40 வருட அரச சேவையிலிருந்து பத்தனை தமிழ் மகா வித்தியால அதிபர் சுப்பையா செல்வம் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.

இவர்கள் நுவரெலியா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை,  க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் மாணவர்கள் அதிகளவில் சித்திபெறுவதற்கு பாரிய பங்காற்றியுள்ளார்கள்.

இவ்வாறு நுவரெலியா கல்வி வலயத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிய இவர்களை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர், வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர்,  கல்வி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர்,

உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா கல்வி வலயத்தில் ஒரேடியாக 8 அதிபர்கள் ஓய்வு நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட மிகச்சிறந்த  8 அதிபர்கள், இம்மாத கடைசியில் ஓய்வு பெற உள்ளதாக நுவரெலியா கல்வி வலய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை போட்மோர் தமிழ் வித்தியாலய அதிபர் கிரிஸ்டோபர் சார்ள்ஸ், 34 வருட அரச சேவையிலிருந்து ஹோல்புறூக் ஆரம்ப பாடசாலை அதிபர் சுப்ரமணியம் புஸ்பனீனா, 35 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கார்லிபேக் தமிழ் வித்தியாலய அதிபர் அந்தோனிமுத்து சவரிமுத்து, 31 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கிளாஸ்கோ தமிழ் வித்தியாலய அதிபர் சுப்பையாபிள்ளை கோகிலவாணி, 35 வருட அரச சேவையிலிருந்து சென்கிளையார் தமிழ் மகா வித்தியால அதிபர் ஆறுமுகம் சத்தியமூர்த்தி,  40 வருட அரச சேவையிலிருந்து பத்தனை தமிழ் மகா வித்தியால அதிபர் சுப்பையா செல்வம் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.இவர்கள் நுவரெலியா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை,  க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் மாணவர்கள் அதிகளவில் சித்திபெறுவதற்கு பாரிய பங்காற்றியுள்ளார்கள்.இவ்வாறு நுவரெலியா கல்வி வலயத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிய இவர்களை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர், வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர்,  கல்வி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement