• Mar 29 2024

முன்னாள் போராளிகளுக்கு 80 சதவீதமான தமிழ் மக்கள் ஆதரவு – மகிழ்ச்சியில் - இன்பராசா.!

Tamil nila / Feb 3rd 2023, 5:47 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போயுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.


எனவே உள்ளுராட்சி தேர்தலில் போராளிகள் போட்டியிடவேண்டும் என்ற நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் போராளிகள்  தமக்கு நிதியுதவிகளை வழங்கி வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். 


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழு 1ல் அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.


இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


போராளிகளாகிய தங்களுக்கு 80 சதவீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 12ஆயிரம் போராளிகளை உள்ளடக்கிய கட்சியாக கடந்த 6 வருடங்களாக பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடிய போரளிகள் தற்போது அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்களை தோள்களில் சுமப்பதற்கு தயாராகியுள்ளதாக க.இன்பராசா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு 80 சதவீதமான தமிழ் மக்கள் ஆதரவு – மகிழ்ச்சியில் - இன்பராசா. தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போயுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.எனவே உள்ளுராட்சி தேர்தலில் போராளிகள் போட்டியிடவேண்டும் என்ற நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் போராளிகள்  தமக்கு நிதியுதவிகளை வழங்கி வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழு 1ல் அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.போராளிகளாகிய தங்களுக்கு 80 சதவீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 12ஆயிரம் போராளிகளை உள்ளடக்கிய கட்சியாக கடந்த 6 வருடங்களாக பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடிய போரளிகள் தற்போது அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்களை தோள்களில் சுமப்பதற்கு தயாராகியுள்ளதாக க.இன்பராசா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement