இந்திய மீனவர்கள் 9 பேரும் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு கடலில் கைதான 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கையின் முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நேற்றுமுன்தினம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் பயணித்த 9 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த சமயமே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு முல்லைத்தீவு கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திருகோணமலை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

9 இந்திய மீனவர்களும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் நேற்று திருகோணமலை பதில் நீதவான் அப்துல் சலாம் சகீர் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டனர்.

இவ்வாறு ஆயர் செய்யப்பட்ட 9 மீனவரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேநேரம் மீனவர்கள் தொழில் புரிந்த படகில் இருந்த 2,200 கிலோ மீனையும் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை