முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கருவளையம் உடனே மறைய வேண்டுமா?

கருவளையம் என்பது பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

கருவளையம் உடனே நீங்குவதற்கு உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் இருக்கும் சாறினை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு கொட்டன் துணியை எடுத்து கொள்ளவும். அந்த துணியை அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்தது செய்து வர எளிதில் கருவளையம் மறைந்து விடும்.

அதுமட்டுமன்றி எலுமிச்சை மற்றும் தக்காளி இவை இரண்டின் சாறை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும். அல்லது தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும். மற்றும் சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

You can share this post!

Recent Post