முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

பிரபல பாடகி அனுராதா தான் எனது தாய் பெண்ணின் பரபரப்பு வழக்கு

பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வால் எனது தாய் என கூறி கேரளாவில் வசிக்கும் 45 வயது பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்மஸ்ரீ மற்றும் தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வாலின், இசையமைப்பாளர் அருண் பட்வாலை திருமணம் செய்த இந்நிலையில், 1974ம் ஆண்டு பிறந்த கர்மலா மோடெக்ஸ் என்பவர் தற்போது திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் அனுராதா பாட்வாலின் தனது தாய் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், அவர் தான் பிறந்து 4 நாட்களில் தனது தாய் அனுராதா பட்வால், தன்னை பொன்னச்சன் என்பவரிடம் தத்து கொடுத்து விட்டதாகவும், அதன் பின்னர் பொன்னச்சன் மற்றும் அவரது மனைவி அக்னீஸ் ஆகியோர் தன்னை வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் பிறந்தபோது தனது தாய் அனுராதா பாடகியாக பிசியாக இருந்தால் தன்னை வளர்த்தால் தனது பாடல் தொழிலில் கவனம் செலுத்த முடியாது என்பதால், அனுராதா தன்னை வளர்க்குமாறு அவர்களிடம் கொடுத்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த உண்மையை அண்மையில் தனது தந்தை இறப்பதற்கு முன்னர் தெரிவித்ததாகவும், ஆனால் இந்த உண்மை தனது வளர்ப்புத் தாயான அக்னீஸ்க்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, எனது தந்தையின் மரணத்திற்கு பின்னர், தான் பலமுறை அனுராதாவிடம் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பேச மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் இதனால், தனது தாயான அனுராதா பட்வால், தனது வாழ்வாரத்திற்காக ரூ.50 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

You can share this post!

Recent Post