முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

இசையின் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இவருடைய முதல் திரைப்படமே இவருக்கான அங்கீகாரத்தை அளித்தது எனலாம். ஆனால் அதற்கு முன் அவர் எதிர்கொண்ட துன்பங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாததாகும். தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய ரஹ்மானுக்கு அதற்கு பின் விருதுகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன. 2009-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஆஸ்கருக்கு முன்பாகவே ‘கோல்டன் குளோப்’ மற்றும் கிராமி விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

விருதுகளின் நாயகனும், இசையின் சிம்ம சொற்பனமுமான ஏ.ஆர்.ரஹ்மானின் 52ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நாமும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

You can share this post!

Recent Post