முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

திரையரங்கில் படம் பார்த்த பரவை முனியம்மா

சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல் நிலை சரியில்லாமலிருந்த வேளை நடிகர் அபி சரவணன், பரவை முனியம்மா அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உடல் நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக் கொண்ட நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் மற்றும் நடிகை வெண்பா நடிப்பில் வெளியான மாய நதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இதனையறிந்த பரவை முனியம்மா அவர்கள் மாயநதி படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து திரையரங்கில் திரைப்படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

You can share this post!

Recent Post