முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

தெலுங்கு நடிகர் மீது பாலிவுட் நடிகை புகார்

மீடூ இயக்கம் வந்த பிறகு நடிகைகள் நடிகர்கள் மீது புகார் கூறுவது அதிகரித்து வருகிறது. நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தி நடிகை நேகா துப்யா, ஹீரோ ஒருவர் தன்னை பட்டினி போட்டதாக வித்தியாசமான புகார் கூறியிருக்கிறார்.

தமிழில் அஜீத் நடித்த வில்லன் படத்தை தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். இதில் கதாநாயகனாக ராஜசேகரும் கதாநாயகியாக நேகாவும் நடித்தார்கள்.

இந்நிலையில் அவர் கூறிகையில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தேன். மதிய உணவு வேளை வந்ததால் பசியாக இருந்தேன். சாப்பாடு எடுத்துவரும்படி கூறியபோது, இன்னும் ஹீரோ சாப்பிடவில்லை. அவர் சாப்பிட்டு முடித்தபிறகு நீங்கள் சாப்பிடுங்கள் என்றனர்.

வேறு ஒருவரிடம் கேட்ட போது அங்கிருந்த எல்லோருமே அதே பதிலை சொன்னார்கள். ஹீரோ சாப்பிட்டு முடிக்கும் வரை என்னை சாப்பிடவே விட வில்லை. அதுவரை பட்டினியாக இருந்தேன் என அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

You can share this post!

Recent Post