• Last Update
  • 29℃ Canada

காதல் குறித்து மனம் திறந்த லாஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

 

ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா கவினுடன் காதலில் விழுந்தார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் லாஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் காத்திருப்பதாகக் கூறியிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

 

இவர் இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் ஆரி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்கள்.

 

சந்திரா மீடியா விஷன் தயாரிக்கிறது. அதேபோல் லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுடன் ஜோடி சேரவுள்ளார். இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கவுள்ளது

 

இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பாச்சி. கடந்த 23 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை பார்த்துக்கிட்டிங்க.

 

இந்த உலகத்துல எந்த பொண்ணும் இவ்ளோ தூரம் ஒரு டிவி சேனல்கு கூப்பிட்டு இந்த உலகமே கேவலமா கதைக்குற சிச்சுவேஷன்ல அவங்க அப்பாவ வச்சுருப்பாங்களானு தெரியல .

 

ஆனாலும் நீங்க என்னை இன்னும் கூட நேசிக்கிறீங்க. பெண்களுக்கு உண்மையான தூய்மையான காதல் என்பது அவர்களின் அப்பாவிடம் தான் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கவின் லாஸ்லியா காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

You can share this post!

Recent Post