முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

உளுந்து வடை செய்முறை விளக்கம் ..!

பொதுவா நாம் வீட்டில் வடை சுடும் போது, உளுந்து மாவை பக்குவமாக அரைத்தாலும் உளுந்து வடை மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்காது. ஆனால் இதை செய்து பாருங்கள், உளுந்து வடை மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்கும்.

இப்போது மொறு மொறு உளுந்து வடை எப்படி செய்ய வேண்டும் என்று பாா்ப்போம்.

உளுந்து வடை செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 1/2 டம்ளர்
வேகவைத்த உருளை கிழங்கு – இரண்டு
கேரட் பொடிதாக நறுக்கியது – ஒரு கையளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – ஒரு கப் (பொடிதாக நறுக்கியது)
மிளகு தூள் சிறிதளவு அல்லது பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது – 2
தேவையான அளவு – உப்பு
எண்ணெய் – 1/2 லிட்டர்
பச்சரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
இஞ்சி பொடிதாக நறுக்கியது – சிறிதளவு

இப்பொழுது உளுந்தை 3 மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து, பின்பு கிரேண்டரில் அல்லது மிக்சியில் சேர்த்து தண்ணீர் அதிகம் ஊற்றாமல் உளுந்தை கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

பின்பு வேகவைத்துள்ள உருளை கிழங்கை நன்றாக மசித்து, உளுந்து மாவுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு கப் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பிசையவும்.

பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கேரட், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும். பின் மிளகு தூளை தங்களது காரத்திற்கேற்ப சேர்க்கவும். பின்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவும்தான் சுவையான மொறு மொறுன்னு, சாஃப்டான வடை தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டலாம் வடை மிகவும் சுவையாக இருக்கும்.

You can share this post!

Recent Post