முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வீட்டிலே பிட்சா செய்வது எப்படி

பிட்சா செய்ய தெரியுமா? இல்லையென்றால் வாய்க பாா்ப்போம்

தேவையான பொருட்கள்:
மைதா – 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
ஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1/4 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
பிட்சா சாஸ் – 1/4 கப்
காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் – 1/2 கப் (துருவியது)
சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு
ஓரிகானோ – தேவையான அளவு

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிசைந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் மொத்தமான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.

அவ்வளவும் தான் இப்போது சுவையான பிட்சா தயாா்.

You can share this post!

Recent Post