முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

நாட்டுக்கோழிக் குழம்பு செய்வோமா?

ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருப்பதோடு நாட்டுக்கோழிகறி தான் நல்லது. இவ்வாறு நன்மை தரும் நாட்டுக்கோழிகறியை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

1 கிலோ நாட்டுக்கோழி (துண்டுகளாக்கப்பட்டது)
3 வெங்காயம் (நறுக்கியது)
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 தக்காளி (நறுக்கியது)
2 டேபிள் ஸ்பூன் தயிர்
3-4 பச்சை மிளகாய் (நறுக்கியது)
1 டேபிள் ஸ்பூன் மல்லி
1/2 டேபிள் ஸ்பூன் சீரகம்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
3 பல் பூண்டு
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் தேவையான அளவு

முதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டு வறுத்து, குளிர வைத்த பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.

20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயாா்.
நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிடலாம்.

You can share this post!

Recent Post