முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

தக்காளி தால் செய்யும் முறை

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. மேலும் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

செய்ய தேவையான பொருட்கள் :
மைசூர் தால் - 1 கப்
தக்காளி - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வாங்க இப்ப செய்முறையை பாா்ப்போம், பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்து கொள்ளவும். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கடைசியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்தால் போதும் சூப்பரான தக்காளி தால் தயாா்.

 

You can share this post!

Recent Post