முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

சங்கா மனைவியை விமர்சித்த சகலதுறை வீரர்

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்தியாவின் சகலதுறை வீரர் இர்பான்பதான் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுடன் 2005 ம் ஆண்டுபுதுடில்லி பெரோசா ஹோட்லா மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்டில் இடம்பெற்ற மோதலை அவர் நினைகூர்ந்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது இனிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இர்பான் பதான் 93 ஓட்டங்களை பெற்றார். விரேந்திர செவாக் காயமடைந்ததன் காரணமாகவே அவர் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அந்த டெஸ்டில் இலங்கை 188 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இர்பான் பதான் முத்தையா முரளீதரனை எதிர்கொண்டவேளை விக்கெட் காப்பாளராகயிருந்த குமார் சங்ககார ஏதோ தெரிவிக்க பதான் பதிலடி கொடுத்தார்.இந்நிலையில் இருவரும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து விமர்சித்தனர்.

மேலும் அவா் கூறுகையில் குமார் சங்ககார குறித்த கதையொன்று எனக்கு நினைவில் உள்ளது.நாங்கள் டில்லியில் டெஸ்ட்போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தோம்,விரேந்திரசெவாக் காயமடைந்ததால் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்கிய நான் 93 ஓட்டங்களைபெற்றேன் என இர்பான் பதான் நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக விளங்கிய குமார் சங்ககாரவிற்கு இலங்கை அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்ப நன்கு தெரிந்திருந்தது, ஆனால்முத்தையாமுரளீதரன் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்தார் என பதான் தெரிவித்துள்ளார். அவ்வேளை குமார் சங்ககார மிகமோசமான எதனையோ தெரிவிக்க முயன்றார்,அவர் என்னை தனிப்பட்ட முறையில் சீண்ட முயன்றார், நானும் அவரை தனிப்பட்ட முறையில் அவரை சீண்டினேன்.

நான் குமார் சங்ககாரவின் மனைவி குறித்து எதனையோதெரிவித்தேன்,அவர் எனது தந்தை சகோதரர் குறித்து எதனையோ தெரிவித்தார் எனவும் அந்த வேளை நாங்கள் ஒருவரையொருவர் குறித்து கடும் உணர்வுகளை கொண்டிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரு நாள் மனைவியுடன் வந்த சங்ககார நடந்தது என்ன என்பது குறித்து தெளிவுபடுத்தினார்,நான் முதலில் எதனையோ தெரிவித்தேன் அதன் பின்னரே பதான் எதனையோதெரிவித்தார் என குமார் சங்ககார தெரிவித்தார் அதன் பின்னர் நாங்கள் நல்ல நண்பர்களானோம் எனவும் இர்பான் பதான் குறிப்பிட்டுள்ளார்.

 

You can share this post!

Recent Post