முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

7 விக்கெட்டுகளால் வெற்றி!

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் 143 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் ராகுல் 45 ஓட்டங்களையும், தவான் 32 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 34 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, விராட் கோலி 30 ஓட்டங்களுடனும் ரிஷாத் பந்த ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

You can share this post!

Recent Post