முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு கூறிய தென்னாபிரிக்கா!

சர்வதேச ஐ.சி.சி தொடர்களுக்கு நெருக்கடி இல்லாமல் நாட்கள் எளிதாக கிடைப்பதற்கும், வருமானத்திற்காக அதிக அளவில் சர்வதேச தொடர்களை நடத்துவதற்காகவும் ஐ.சி.சி. ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஐ.சி.சி. தெரிவித்தது.

ஐ.சி.சி-யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மூன்று சபைகளில் ஒன்றான இங்கிலாந்து கிரிக்கெட் சபை உடனடியாக ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி ஜாம்பவான்கள் நான்கு நாள் டெஸ்ட் என்ற ஐ.சி.சி.யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென்னாபிரிக்காவும் ஐ.சி.சி.யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்சமயம் அந்த செய்தி பொய்யானது. நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

You can share this post!

Recent Post