முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

டெஸ்டிலிருந்து விலகிய முக்கிய வீரர்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் விலகியுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி கேப் டவுனில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

2ஆவது செசனின் போது அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக உணர்ந்தார். இதனால் தேனீர் இடைவெளிக்குப்பின் பந்து வீசவில்லை. இதன்பிறகு ஜேம்ஸ் எண்டர்சனுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதன்போது அவருக்கு காயத்தின் தன்மை வீரியமாக இருப்பதால், அவரை ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் அவர் மீதமுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து ஜேம்ஸ் எண்டர்சன், முழுமையாக விலகியுள்ளார். 37 வயதான ஜேம்ஸ் எண்டர்சன், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் ஜேம்ஸ் எண்டர்சனுக்கு பதிலாக 25 வயதான வலக் கை மிதவேகப்பந்து வீச்சாளரான கிரைஜ் ஓவர்டொன் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் ஆகிய இருவரும் உபாதைக் காரணமாக ஓய்வில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

You can share this post!

Recent Post