முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

நியுசிலாந்துடனான ஒருநாள் தொடர்தோல்வி – விராட் கோலி

நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர், ‘இந்திய அணியின் களத்தடுப்பு சர்வதேச தரத்தில் இல்லை. இதுவே நியுசிலாந்துடனான ஒருநாள் தொடர் தோல்விக்கு காரணமாகும்.ஒருநாள் தொடர் முழுவதும் இந்திய அணியின் மனஅமைதியும் அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட விதமும் சர்வதேச போட்டிகளிற்கு உகந்தது இல்லை.

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தடுமாறிய நிலையிலிருந்து நாங்கள் மீண்டு வந்து 296 ஓட்டங்களை பெற்றது சாதகமான விடயமாகும். களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை.

மேலும் ஒருநாள் தொடரில் நியுசிலாந்து அணியினர் அதிக தீவிரத்துடன் விளையாடினார்கள். அவர்கள் 3-0 என்ற அடிப்படையில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள்.ஐ.சி.சி.யின் டெஸ்ட் சம்பியன்சிப் காரணமாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது. எங்களிடம் சமபலத்துடனான டெஸ்ட் அணி உள்ளது.

நாங்கள் தொடரை வெல்லமுடியும் என கருதுகின்றேன். ஆனால் அதற்கு சரியான மனோநிலையுடன் விளையாடுவது அவசியம்’ என தெரிவித்துள்ளார்.மேலும் ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியடைந்த இந்தியா. அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் என முன்னாள் இலங்கை வீரர் ருசல் அர்னால்ட் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்

 

You can share this post!

Recent Post