முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

சிறந்த கால்பந்து வீரராக தெர்வான செடியோ மானே!

ஒவ்வொரு ஆண்டும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்தவருக்கு சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆபிரிக்க வீரர் விருது வழங்கும் நிகழ்வு ஆபிரிக்க கால்பந்து சம்மேளனத்தால் எகிப்தின் ஹுர்கடா நகரில் நடைபெற்றது.

இந்நிலையில் ஆபிரிக்க வீரர் விருது வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரருக்கான விருதை 27 வயதான செனகல் கால்பந்து அணியின் முன்கள வீரர் செடியோ மானே, முதல்முறையாக வென்றுள்ளார்.

அத்தோடு மொஹமட் சாலா, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆண்டின் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீராங்கனையாக நைஜீரியாவின் அசிசத் ஓஷோலா நான்காவது முறையாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post