முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

முந்திரி பருப்பு சாப்பிட்டால் ஏற்படுவது என்ன?

முந்திரி பருப்பில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதிக கலோரி கொண்டுள்ளதால் உடல் எடையை அதிகரிக்குமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது. இதில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.

இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது. இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள்.

மேலும் முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயாமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதி யாக்குகிறது.

அத்தோடு ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டாபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது.

பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை. பெண்கள் 4 கிராம் அல்லது 10% அளவு பெண்கள் தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

சரியான அளவில் முந்திரி பருப்பை எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

You can share this post!

Recent Post