முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கொண்டைக்கடலையினால் ஏற்படும் நன்மைகள்

கொண்டைக்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. மேலும் 164 கலோரிகள் இருக்கிறது. கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு.

அத்தோடு கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.

எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்ற இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் இருக்கிறது என்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இதனை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. கொண்டைக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

You can share this post!

Recent Post