முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வலிகளுக்கு நவீன சிகிச்சை முறை

கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தண்டுவட சவ்வு விலகல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு ஸ்பைனல் டீகம்பிரஷன் தெரபி (Spinal Decompression Therapy) என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இன்றைய திகதியில் பெரும்பாலானவர்கள் பல்வேறு காரணங்களால் துவிச்சக்கரவண்டியில் நீண்டதூரம் பயணிக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுடைய முதுகெலும்பில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக டிஸ்க் ப்ரொலாப்ஸ் எனப்படும் தண்டுவட சவ்வு கிழிதல் மற்றும் விலகல் என்ற பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இத்துடன் கழுத்து வலி மற்றும் முதுகு வலியும் ஏற்பட்டு, அவை நீண்ட நாட்கள் பிரச்சனையாகவும் மாறிவிடுகிறது.

சிலருக்கு முதுகுவலியால் கை மற்றும் கால்களில் உணர்ச்சியின்மை ஏற்படும். சிலருக்கு கழுத்து வலியால் கைகளில் மரத்துப் போகும் தன்மையும் ஏற்படும். இதற்கு நீங்கள் சிகிச்சை அளிக்காவிட்டால் நாளடைவில் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படக்கூடும்.

இவர்களுக்கு பெரும்பாலும் சத்திர சிகிச்சை முறையிலான தீர்விருந்தாலும், பெரும்பான்மையோர் அதனை உடனடியாக மேற்கொள்வதில்லை. இந்நிலையில் இத்தகைய பாதிப்பை குணப்படுத்த Spinal Decompression Therapy என்ற சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இத்தகைய சிகிச்சையின்போது பிரத்யேக கருவிகள் மூலம், நோயாளியின் முதுகெலும்பில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அங்கு சிகிச்சைக்கான கருவிகளை வைத்து மின் அதிர்வலைகள் சிகிச்சை மற்றும் பிரத்யேக கருவிகளுடன் கூடிய இயன் முறை மருத்துவ சிகிச்சை அளித்து வலியை குணப்படுத்துவார்கள்.

அதாவது பாதிக்கப்பட்டத் தண்டுவடப் பகுதியில் கருவிகளுடன் கூடிய இயன்முறை மருத்துவ சிகிச்சை செய்வது தான் இந்த சிகிச்சை. சத்திர சிகிச்சையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை, 10 முதல் 15 அமர்வுகளில் வழங்கப்படுகிறது.

அதேபோல் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து 30 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வகையிலான சிகிச்சையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.

You can share this post!

Recent Post