முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

பச்சை பயிறு கஞ்சியால் என்ன பலன்

உடலில் நீர்சத்து குறைவாக காணப்படுபவர்கள் இந்த காய்கறிக்கஞ்சியை குடிக்கும் பொழுது உடலில் நீர்சத்து அதிகரிக்கும். இப் பச்சை பயிறு காய்கறி கஞ்சி எவ்வாறு செய்யலாம் என பாா்ப்போம்.

தேவையான பொருட்கள்
அரிசி-1/2 கப்
பச்சை பயிறு-1/2 கப்
கேரட்-1
வெள்ளரிக்காய்-சிறிதளவு
பீன்ஸ்-5
தக்காளி-1
சாம்பார் வெங்காயம்-1 கைப்பிடி
பூண்டு-4
வெந்தயம்-1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு-5
எண்ணெய்-1 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறையை பாா்ப்போம்.

முதலில் அரிசி, பச்சை பயிறை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவையுங்கள். கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ், தக்காளி, சாம்பார் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும். அரிசி, பருப்பு பாதியளவு வெந்ததும் அதனுடன் உப்பு, காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய வெங்காயம், தக்காளியை அரிசி கலவையுடன் சேர்த்து வேக விடவும்.

30 நிமிடங்கள் கஞ்சியானது நன்றாக கொதித்து அரிசி மற்றும் காய்கறிகள் வெந்தால் போதும் சத்தான காய்கறி கஞ்சி தயாா்.

இதை நாம் கிழமையில் ஒரு முறையாவது கட்டாயம் செய்து பருகினால் உடலில் நீர்சத்து அதிகரித்து உடல் ஆரோக்கியமடையும்.

You can share this post!

Recent Post