முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

சட்டத்தை மீறியிருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும்

அதிகாரங்களை யாராவது தவறாகப் பயன்படுத்தி சட்டத்தை மீறியிருந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் அவர் இதனை தெரிவிக்கையில்,

தவறு செய்தவர்களைத் தண்டிக்கத் தவறினால், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் மேலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எவ்வளவு முறை சட்டம் மீறப்பட்டது என்றும் ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்பட்டது என்பதையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து இவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால், நாட்டின் சட்டம், நீதித்துறை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்காது அத்தோடு அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி பதிவுகள் மூலம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர கூறினார்.

ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் அவர்களது பதவிகளை பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

You can share this post!