முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

நிலவும் போர் பதறறம் தணிய வேண்டும்

வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது. அந்த பிராந்தியத்தின் முக்கிய நாடுகளுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சூழ்நிலையை இந்தியா மிகவும் உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த ‘போர் பதற்றத்தை தணிக்க அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை இந்தியா வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You can share this post!