முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

புதிய இராஜதந்திர நியமனங்கள் விரைவில் செயட்ப்படும் - தினேஷ் குணவர்த்தன

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெற்றிடமாக இருக்கும் இராஜதந்திர இடங்களுக்கு புதியவர்கள் அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிய இராஜதந்திர நியமனங்கள் விரைவில் செயட்ப்படும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், பல தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் பிற இராஜதந்திரிகள் நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர், அதில் பெரும்பாலானவர்கள் திரும்பி வந்துள்ள நிலையில் மேலும் வரவிருக்கும் நாட்களில் இந்த வெற்றிடங்களை நிரப்ப ஜனாதிபதி புதிய நியமனங்கள் வழங்குவார் என நான் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

தேர்தல்களின் போது அரசியல் நியமனங்கள் செய்ய தடை விதிக்கப்பட்ட போதும் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தால் சில நியமனங்கள் செய்யப்பட்டன என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

எனவே அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டுமே தற்போதைய அரசாங்கம் திரும்ப அழைத்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

You can share this post!

Recent Post