முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

யாழில் சுவரோவியம் மீது கழிவுநீர் வீச்சு!

நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீது நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோர் கழிவு நீரை ஊற்றி அதனை நாசம் செய்துள்ளனர்.

மேலும் தாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் முகமாக வரைந்த சுவரோவியத்தை விசமிகள் நாசம் செய்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You can share this post!

Recent Post