முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

விபத்தில் – பல்கலை மாணவன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உடையார்கட்டு, மூங்கிலாறு தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா வயது 24 என்பவரே உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த இளைஞன் முகாமைத்துவ பீடத்தில் பேராதெனிய பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post