முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கம்!

அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் என்று இயங்கி வந்த நிறுவனமானது வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்ற அரச நியமனம் கிடைக்கப்பெறாத வடமாகாண பட்டதாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜாவினால் இன்று அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் வழிகாட்டலில் பட்டதாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் உதயமாகி புதிய நிறுவனத்தினூடாக அனைத்துப்பட்டதாரிகளின் ஒத்துழைப்புக்களுடன் பாரிய அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களில் பங்காற்றுவதுடன் வடமாகாணத்திலுள்ள அரச நியமனம் இதுவரை காலமும் கிடைக்கப்பெறாத மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்பை அரசாங்கத்தினூடாக ஏற்படுத்திக்கொடுக்கும் தொழில் முறைசார்ந்த செயற்பாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் சேவையாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதர்வரும் ஒரு மாத காலத்திற்குள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகணத்திலுள்ள அனைத்துப்பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி மாநாடு நடாத்துவதற்கு ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு அரசாங்கத்தின் நிர்வாக ரீதியிலான அதிகாரிகளான வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களை அழைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக ம. ஆனந்தராஜா, செயலாளராக த.ரஜனிக்காந், பொருளாராக ச.பார்த்தீபன், சிரேஷ்ட பிரதித்தலைவராக பெ.புவனேந்திரன், போசகராக போராசிரியர் மோகனதாஸ், ஆலோசகராக கே. கமலநாதன் ஆகியோரும் செயற்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You can share this post!

Recent Post