முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை , கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் இதனை தவிர, கடந்த செயற்குழுக்கூட்டத்தில், உறுப்புரிமைகள் இரத்து செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர், மீண்டும் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கடந்த 30 ஆம் திகதி இறுதியாக கூடியது.கடந்த 6 ஆம் திகதி குழு கூடவிருந்த போதிலும் பின்னர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post