• Last Update
  • 29℃ Canada

பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்கள் -காங்கிரஸ் பொதுச் செயலாளர்

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உ.பி.யில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஃபிரோசாபாத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார்.

மேலும் சீதாபூரில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அரசு என்ன செய்கிறது? பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனால் அரசு இதற்கு பொறுப்புகூட ஏற்பதில்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை இது குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஆத்தியநாத் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You can share this post!

Recent Post