• Last Update
  • 29℃ Canada

பா.ஜ.க.தலைவர்களே தேர்தல் தோல்விக்கு காரணம்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.தோல்வியடைந்ததற்கு பா.ஜ.க.தலைவர்களே காரணம் என அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க.வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றமை பா.ஜ.க.தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷாவிடம் டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் பரப்புரையின்போது, ஷாஹின்பாக் எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பா.ஜ.க.தலைவர்கள் பேசியிருக்க கூடாது என தெரிவித்தார்.

அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனவும் பா.ஜ.க.தலைவர்கள் கூறினர். இதுபோன்ற கருத்துக்களை பா.ஜ.க.தலைவர்கள் கூறியிருக்கக் கூடாது, ஏனென்றால் இதுவே பா.ஜ.க.வின் தோல்விக்கு காரணமாக அமைந்ததெனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் பா.ஜ.க.வை டெல்லி மக்கள் ஒதுக்கிவிடவில்லை எனவும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை வைத்து மக்கள் பா.ஜ.க.வை ஒதுக்கிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் மூன்றாம் இடைத்தையே பிடித்ததாகவும், அதனால் மக்கள் அவர்களை ஒதுக்கிவிட்டதாக கருத முடியாது எனவும் தெரிவித்தார்.தேர்தல் தோல்விகளால் நாங்கள் மக்களைவிட்டு வெகு தூரத்தில் செல்லவில்லை எனவும் தங்கள் கருத்தியலை மாற்றவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You can share this post!

Recent Post