• Last Update
  • 29℃ Canada

கர்ப்பிணிகளுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் ஓமந்தை மருதமடு வட்டாரத்தில் வசித்து வரும் வசதியற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவுப் பொதிகள் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, மருதமடு, பாலமோட்டை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கு வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தில் 11 பேருக்கு சத்துணவுப்பொதிகள் நேற்று தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

You can share this post!

Recent Post