• Last Update
  • 29℃ Canada

உதய வீரதுங்க குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது

இன்று அதிகாலை நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்27 ரக விமான கொள்வனவின் போது இடம் பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க சந்தேக நபராக பெயரிடப்பட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

2016.10.20 ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 ஆவது பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்வதற்கான சிவப்பு அறிவித்தல், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post