• Last Update
  • 29℃ Canada

ராகுல் காந்தியின் கருத்திற்கு பா.ஜ.க கண்டனம்.

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்துகள் மூலம் அவமதித்து விட்டதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும் புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ராகுல் காந்தி மூன்று கேள்விகளை எழுப்பி ருவிட்டரில் பதிவு செய்திருந்தார். குறித்த பதிவுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இது குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், கூறுகையில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நாடு மரியாதை செலுத்தும் போது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அனுதாபியான ராகுல்காந்தி அரசாங்கத்தை மட்டுமல்ல பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார்.உண்மையான குற்றவாளியான பாகிஸ்தானை ராகுல் ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டார். அவமானம்’ என ருவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதேபோல் முன்னாள் நாடாளுமன்ற அமைச்சரான சையத் ஷாநவாஸ் உசேன் ராகுல் காந்தி சி.ஆர்.பி.எப் வீரர்களை அவமதித்து விட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

You can share this post!

Recent Post