முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

வேளாண் மண்டலங்களை பாதுகாக்கும் சட்டம்

காவிரி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமளிக்கும் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், ககன்தீப் சிங் பேடி, ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில், நேற்றிரவு விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்த, தனிச் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சிறப்பு வேளாண்மை மண்டல பாதுகாப்புச் சட்டம் 2020 என்ற பெயரில் சட்டம் இயற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இதற்கான சட்டமூலம் நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You can share this post!

Recent Post