முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

7 அடி நீளமுள்ள சிறுத்தை புலி உயிருடன் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா, புரன்லோ தோட்ட பகுதியில் வலையில் சிக்குண்டு உயிருடன் சிறுத்தை புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று  இரவு 10 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வேட்டையாடுவதற்கு விரிக்கபட்ட வலையில் சிக்குண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தை புலி தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலுக்கு அமைய மஸ்கெலியா பொலிஸாரின் ஊடாக நல்லதன்னி வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்பு சம்பவ இடத்திற்கு வருகை தந்த நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தை புலியினை உயிருடன் மீட்டு ரந்தெணிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கி வருவதாகவும், குறித்த சிறுத்தை புலிக்கு வயிற்று பகுதியில் பாரிய காயம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுத்தை புலி 7 அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை புலி என நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You can share this post!

Recent Post