முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

சில்வாவிற்கு தடை- கடும் ஆட்சேபனையில் இலங்கை

அமெரிக்கா இராணுவத்தளபதி சவேந்திரசில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயணத் தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளது.

மேலம் இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திரசில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார் அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை அத்துடன் இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்டநிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவபிரதானி பதவியை வழங்கினார்

அத்துடன் இலங்கையின் இராணுவத்தளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

You can share this post!

Recent Post