முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

பிரதம நீதவானுக்கு பிரியா விடை

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிரதம நீதவானாக கடமையாற்றிய எம்.எச்.எம்.ஹம்சா, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு திருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பிரியாவிடை வைபவம் நேற்று நடைபெற்றது.

திருகோணமலை நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பிரியாவிடை நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். கண்ணன், திருகோணமலை மாவட்ட நீதிபதி
எம்.பி.முஹைதீன், மேலதிக நீதவான் திருமதி. எஸ்.இரத்னாயக்க ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிலையில் அன்னாரின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

You can share this post!

Recent Post