முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

நகர சபையாக மாறவுள்ள சாய்ந்தமருது..!

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியானது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச மாதம் 20 ஆம் திகதி முதல் அதிகாரத்திற்கு வரும் வகையில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஒன்று முதல் 17 வரை கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கியவாறு இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைப் பாதையின் மத்திய கோட்டினூடாக கடற்கரையிலிருந்து கிழக்குப் பக்கமாக ஆரம்பித்து மேற்குப் பக்கமாகச் சென்று, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான பாதையை அடைந்து, மீண்டும் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான பாதையிலிருந்து, வடக்கு பக்கமாக ஆரம்பித்து பிரதான பாதையூடாக தெற்குப்; பக்கமாக கானடிப்; பாதை வரைக்கும் சென்று மீண்டும் கல்முனை - அக்கரைப்பற்று பாதையிலிருந்து கிழக்குப் பக்கமாக ஆரம்பித்து கானடிப் பாதை வழியாக நேராக மேற்குப்பக்கம் செல்கின்ற போது நெல்வயற் காணிகளை ஊடறுத்து வெட்டையாறு சந்திக்கும் இடம் வரைக்கும் சாய்ந்தமருது நகர சபையின் எல்லைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

You can share this post!

Recent Post