• Last Update
  • 29℃ Canada

காதலர்தினத்தில் - நான் சிரித்தால்

 

இசையமைப்பாளராகயிருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா. இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்ந நிலையில் இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்ததனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தினையும் தயாரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து நாளை வெளியாகவுள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

You can share this post!

Recent Post