முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

புதிய தோற்றத்தில் ஐபோன்கள்

2020 இல் ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபோன் மொடல்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இது வரை ஐபோன்களின் திரையின் அளவை குறைத்துக்காட்டும் ஐபோன்களில் மேற்பகுதியில் முன்பக்க கமரா மற்றும் மைக் காணப்படும் பகுதி புதிய ஐபோன்களில் குறைக்கப்பட்டு சிறிய நாட்ச் கொண்ட வடிவமைப்பு வழங்கப்படும் என்றும் 2021 மொடல்களில் நாட்ச் முழுமையாக நீக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் புகுத்தப்படாலம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 2020 சீரிஸ் உயர் தர மொடல்களில் முழு திரையை கொண்ட வடிவமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 2020 ஐபோனில் டச் ஐடி சென்சார் திரையின் கீழ் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன்களின் பேஸ் ஐடி அம்சம் சிறப்பானதாக இருந்தாலும் அது பாதுகாப்பு குறைவானதாக கருதப்படுகின்றது எனவே இந்த அம்சம் நீக்கப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய ஐபோன் மொடல்களில் டிஸ்ப்ளே நாட்ச் இல்லாமல் மூன்று வடிவமைப்புகளுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மொடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தினம் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You can share this post!

Recent Post