முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

கழுத்து வலியை கட்டுப்படுத்த...

நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்க கூடிய வேலை, கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான். இதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. இவற்றில் முதன்மையானது கழுத்து வலி தான்.

நாம் உட்காரும் நிலை மற்றும் கணினி வைத்திருக்கும் நிலை இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி. கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்து முதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

சில நேரங்களில் கழுத்து வலி தோள்பட்டை வலியாகவும் குறிப்பிடப்படும்.
இடது பக்க கழுத்து வலிக்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது உள்ளுறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இதயம், ரத்த நாளங்கள், கணையம் மற்றும் பித்தப்பையில் உண்டாகிற ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட இடது பக்கம் கழுத்து வலி ஏற்படும்.

இதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.

கழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான நிலையில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்படும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதால் கழுத்து தசை தற்காலிகமாக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.

இந்நிலையில் புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும். ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது. இதைத் தவிர, கட்டி, முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. அதாவது கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி போன்ற வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

You can share this post!

Recent Post