முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

நீரிழிவுடன் நூறு வயது வாழலாம்

வாழ்க்கை முறையையும் மருத்துவரின் பரிந்துரைகளையும் சரியாக அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து மட்டுமின்றி மற்ற நீடித்த நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் 100 ஆண்டுகள் வாழலாம்.

“பொதுவாகவே மக்களிடம் நீரிழிவு நோய் பற்றிய பயம் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு, அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும் 8 முதல் 10 வருடங்கள் வரை அவர்களுக்கு ஆயுள் குறையும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தன் வாழ்க்கை முறையையும் மருத்துவரின் பரிந்துரைகளையும் சரியாக அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து மட்டுமின்றி மற்ற நீடித்த நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் 100 ஆண்டுகள் வாழலாம் என்பதே உண்மை“, என்று மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டிய ரகசியங்களை தெரிவிக்கிறார்கள்.

ஒழுக்கமான பழக்க வழக்கங்களை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். இரவு சீக்கிரமாக படுத்து காலையில் சீக்கிரமாக எழுவது நல்லது,தினமும் மிதமான உடற்பயிற்சி அவசியம். 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமான நடை பயிற்சியோ உடற்பயிற்சியோ நீச்சலோ ஏதேனும் விளையாட்டிலோ ஈடுபடலாம்,புகை பிடிப்பது புகையிலை மெல்வது போன்ற பழக்கங்கள் ரத்த நாளங்களை கெடுத்துவிடும். அதை அறவே தவிர்ப்பது நல்லது.அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளை பாதிப்பதுடன் உடல் பருமனையும் ஏற்படுத்தும். எனவே மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது, நீரிழிவு நோயுள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக்கூடாது பிடித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அதை அளவோடும் முறையோடும் சாப்பிட வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இருக்க வேண்டும். பசித்தபின் அளவோடு உண்பது நல்லது.சாப்பிடும்போது வயிறு முழுவதுமாக நிரம்பும் அளவிற்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிறு சற்று காலியாக இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் அஜீரணம் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் ஜீரணம் நல்ல முறையில் அமையும்.

இவ்வாறான சில விடயங்களை கடைப்பிடிப்பதோடு மட்டுமன்றி மேலும் சிலவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்

மேலும் அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளை பாதிப்பதுடன் உடல் பருமனையும் ஏற்படுத்தும். எனவே மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது, மன அழுத்தம் உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது. மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். எனவே மன அழுத்தத்தை குறைக்க ஏதேனும் விளையாட்டு, இசை, பொழுதுபோக்கு போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தலாம். யோகா பிராணாயாமம் தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதும் நல்லது.

மேலும் நீரிழிவு நோய்க்காக நீரிழிவு நோய்க்கான மருத்துவரை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சென்று ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதால் நீரிழிவினால் வரக்கூடிய பல சிக்கல்களை மட்டுமின்றி உடலில் மற்ற நோய்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய இந்த ரகசியங்களை ஒருவர் முறையாக கடைபிடித்து வந்தால் 100 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை”
என்று கூறுகின்றார்கள்.

 

 

You can share this post!

Recent Post