முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

2020 இல் சூரியனில் ஏற்படும் மாற்றம்

சீனாவின் புதிய முயற்சியான செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.புதுமையான முயற்சிகளை எடுப்பதில் சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் செயற்கை மழை, செயற்கை நிலவு என்ற வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதற்கான முயற்சியை சீன நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கார்பரேஷனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்த பணி தற்போது முடிவடையும் நிலையிலுள்ளது.

டோக்காமாக் ரியாக்டர் என்ற பெயரில் அணுக்கரு உலையை சீனர்கள் உருவாக்கி அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதுவரை சூரியனும் ஒளிரும் என குறிப்பிட்டுள்ளனா்.

பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். அதேவேளை HL- 2M Tokomak என இந்த செயற்கை சூரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இச் சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என சீன அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post