முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

செரீனா முதல் சுற்றில் வெற்றி - டென்னிஸ்

ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், இத்தாலியின் கமிலா ஜியார்ஜியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், முதல் செட்டை ஆக்ரோஷமாக விளையாடி செரீனா வில்லியம்ஸ் 6-3 என கைப்பற்றினார்.

தொடர்ந்தும் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் தனது ஆக்ரோஷத்தை தொடர்ந்த செரீனா வில்லியம்ஸ் செட்டை 6-2 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

 

You can share this post!

Recent Post