முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிப்பு -கொரோனா வைரஸ் அபாயம்

சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன், விசேட முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பானில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நால்வர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You can share this post!

Recent Post