முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

தொடர்ந்து 45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சியினை இந்தியாவில் தற்பொழுது ஹூவாமி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் கிளியர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு உணர் கருவி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

அத்தோடு இளைஞர்கள் மட்டும் இல்லாமல், முதியோர்களுக்கும் இது பயன்படும் வகையில் பல பயன்களை ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.

இதில் 1.28 இன்ச் அளவு குட்டி திரை டிஸ்ப்ளே, 176 x 176 பிக்சல் கொண்டதாகவும், மேலும் 2.5 Corning Gorilla glass-வுடன் செயல்படுகிறது.

மேலும், ஏதேனும் ஆப் நோட்டிபிக்கேஷன் வந்தால் கூட அதை உடனுக்குடன் தெரிவித்து விடும். இதே போல், மொபைல் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் போது, நமது போனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வந்தால், அத்தகைய நோட்டிபிகேஷன்களும் உடனுக்குடன் வந்து விடும்.

இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் ஹூவாமி அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது. விலை 3,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆடர் செய்து வாங்கலாம்.

You can share this post!

Recent Post