முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

புதிய வசதியுடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்வாட்ச்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்று உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் இதில் இசிம் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இசிம் வசதி இருப்பதால் ஸ்மார்ட்போன் இல்லாமலேயே இணைய வசதியை பெற முடியும். இரு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனிலும் இசிம் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இசிம் வசதி டூயல் சிம் போன்று இருக்குமா அல்லது போனில் சிம் ஸ்லாட் முழுமையாக நீக்கப்பட்டு விடுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இசிம் வசதி இருக்கும் பட்சத்தில் நெட்வொர்க்கில் இருந்தபடி அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனுடன் இணைக்காமலேயே பயன்படுத்த முடியும். 

முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சிம்லி எனும் பெயரில் புதிய காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டது. சிம் மற்றும் இசிம் கார்டுகளின் பிரிவில் காப்புரிமை பெறவிண்ணப்பிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.

காப்புரிமை விவரங்கள் புதிய நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இசிம் வசதி வழங்கப்பட இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பிப்ரவரி 23-ம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

You can share this post!

Recent Post