முக்கிய செய்திகள்
  • Last Update
  • 29℃ Canada

‘வைல்ட் கார்ட்’ சலுகை பெற்ற மரியா ஷரபோவா!

ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு ‘வைல்ட் கார்ட்’ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த தொடரில், நேரடியாக விளையாட மரியா ஷரபோவாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதை ஷரபோவா ஏற்றுக் கொண்டார்.

ஐந்து முறை கிராணட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, கடந்த 2008ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடை பெற்று மீண்டும் டென்னிஸ் களத்திற்குள் புகுந்த 32 வயதான மரியா ஷரபோவா, அதன்பிறகு பெரிதளவில் சாதிக்கவில்லை.

இந்நிலையில் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You can share this post!

Recent Post